வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக சமயல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே முன்னுரிமை அளித்து விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லையில் மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டரகளை புக் செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த தகவல்கள் பரவியதால், பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் ஆன்லைன் முன்பதிவு சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. மேலும், செல்போன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களும் செயல்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக காலை முதலே பலர் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். தங்களுக்கு சிலிண்டர் கிடைக்குமா என்ற அச்சமும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
மொபைல் மற்றும் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்ய முடியாததால், பலர் நேரடியாக எரிவாயு ஏஜென்சிகளுக்கு சென்று முன்பதிவு செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
நெல்லை மட்டுமல்லாமல் கோவை உள்ளிட்ட சில பகுதிகளிலும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் இதே போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை
