Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக நடக்கும் 'பார்ட்டி ஃபண்ட்' வசூல்: தவெக அரசு மீது தொடரும்...

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக நடக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூல்: தவெக அரசு மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள்!

-

- Advertisement -

கோவில் சொத்து முறைகேடு விவகாரத்தில் ஆளும் தரப்பு சிக்கியிருக்கும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக அரசு வெளிப்படையாகப் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூலில் ஈடுபட்டு வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான அடுத்தடுத்த சர்ச்சைகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

தவெக அரசு

we-r-hiring

வழக்கறிஞர் அணி நிர்வாகி நீக்கம் மற்றும் தொடர் புகார்கள்:

ஏற்கெனவே, அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் பேரில் அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாகக் குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெகவின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரம் பூதாகாரமானதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தேனி தெற்கு மாவட்டத் தவெக செயலாளர் ‘லெஃப்ட்’ பாண்டி என்பவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் வெளியான பேர ஆடியோ:

இந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலும் புதிய சர்ச்சை வெடிந்துள்ளது. அங்கு அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக, கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ் என்பவர், “மத்தவங்களுக்கு 15 லட்சம், தவெக என்பதால் 12 லட்சம்” என்று வெளிப்படையாகப் பேரம் பேசும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. இந்த ஆடியோ ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மீதான நேரடி விமர்சனங்கள்:

“உங்க அண்ணன், உங்க விஜய்” என்று பொதுமேடைகளில் வாய்கிழியப் பேசிய முதலமைச்சர் விஜய் இதையெல்லாம் கண்டும் காணாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கு, எங்கு என்னென்ன கமிஷன் வாங்கலாம் என்று அவர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஊழலை ஒழிக்கப் பிறந்த உத்தமன் போலக் பிம்பம் கட்டமைத்துப் பேசிய விஜய்தான் தற்போது நம்பர் 1 ஊழல்வாதியாகக் காலம் காட்டிக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன. மேலும், சட்டத்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் நிர்வாகம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!

MUST READ