Homeசெய்திகள்மாவட்டம்தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி....

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!

-

- Advertisement -

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ள ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்றும்; இல்லையெனில் அந்தப் பட்டமளிப்பு விழாவையே ரத்து செய்ய வேண்டும் என்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் (எம்.பி.) ராபர்ட் புரூஸ் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!

ஆளுநர் மாளிகை அழுத்தமளித்ததா? — துணைவேந்தருக்குக் கேள்வி
பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் குறித்து திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ் அளித்த சிறப்புப் பேட்டியில் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு, “தேசியப் பாடல், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு ஏதேனும் மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.”

we-r-hiring

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தருவது சட்டப்பூர்வ விதி
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலும், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பது அரசின் சட்டப்பூர்வமான விதியாகும். அரசு விதியை மீறி நடக்கும் எந்தவொரு செயலையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறினால் விழாவையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். எம்.பி. ராபர்ட் புரூஸின் இந்த அதிரடி எச்சரிக்கை பல்கலைக்கழக வட்டாரத்திலும், தென் மாவட்ட அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அருகே பரபரப்பு: 3-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை — 5 ஆண்டுகளுக்குப் பிறகு ‘போக்சோ’வில் வாலிபர் கைது!

MUST READ