spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெம்மொழி இலக்கிய விருது - பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு - சு.வெங்கடேசன்!

செம்மொழி இலக்கிய விருது – பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு – சு.வெங்கடேசன்!

-

- Advertisement -

இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

mp venkatesan

we-r-hiring

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சாகித்ய அகாதமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் தன்னாட்சி அமைப்புகளை சிதைக்கப்பட்டால் மாநிலங்கள் உரிய படைப்புகளை தேசம் முழுவதும் கவனம் பெறுவதைப் போன்று உயர்த்திப் பிடிக்கும். இது பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு என்று சு.வெங்கடேசன் எம்.பி., பாராட்டு தெரிவித்துள்ளார்.

MUST READ