spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”N-ஜென்” - இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…

”N-ஜென்” – இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…

-

- Advertisement -

“சென்னை ஐஐடியில் அடுத்த தலைமுறையினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட  நியூ ஜெனரேசன் என்பதை குறிக்கும் N-ஜென் எனும் துணை அஞ்சலகத்தை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.”N-ஜென்” - இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…கல்வி நிறுவனங்களுக்குள் இயங்கும் தபால் நிலையங்களை மறுசீரமைக்கும் தேசிய அளவிலான அஞ்சல் துறை முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ‘N-ஜென்’ தபால் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அஞ்சல் சேவைகளுடன் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை இணைத்து, குறிப்பாக இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்டு செயல்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் இளம் பயனாளர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தபால் நிலையத்தில், காஃபி விற்பனை இயந்திரம், இலவச வைஃபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்ட பல கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, தமது கல்லூரி மற்றும் பேராசிரியர் காலத்திலும் தபால் நிலையத்துடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக தெரிவித்தார். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தபால் அனுப்ப ஸ்பீடு போஸ்ட் முக்கியமான சேவையாக உள்ளது என்றும், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் குளிரூட்டப்பட்ட அறையுடன் கூடிய நவீன தபால் நிலையமாக இது புதுப்பிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், பல கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய நியூ ஜெனரேசன் தபால் நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஐ.ஐ.டி. பேராசிரியர்களால் நடத்தப்படும் ‘கல்வி சக்தி’ திட்டத்தை கிராமப்புற மாணவர்களுக்கும் கொண்டு செல்ல, இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவிகளை கிராமப்புற தபால் நிலையங்களில் அமைத்தால், ஐ.ஐ.டி. பாடத்திட்டங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையும் என அவர் தெரிவித்தார்.

மேலும், வரும் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி, ஐ.ஐ.டி. மாணவர்களுக்காக பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த உள்ளதாகவும் காமகோடி தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு பேசிய சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், தமிழ்நாட்டில் முதன்முறையாக கொங்கு பொறியியல் கல்லூரியில் ‘N-ஜென்’ தபால் நிலையம் தொடங்கப்பட்டதாகவும், தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் இரண்டாவது நியூ ஜெனரேசன் தபால் நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இளம் தலைமுறையினரை தபால் நிலைய சேவைகளுக்குத் திரும்ப வைக்கும் முயற்சியாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுக்கு நெருக்கடி…தமிழகம் முழுவதும் நாளை முதல் காலைவரையற்ற போராட்டம்…

MUST READ