spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது.... அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

-

- Advertisement -

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

we-r-hiring

வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். தொடர்ந்து,  சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கம், தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு,  வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் எடுத்துக்கொண்ட பணிகளில் தேர்தலுக்கு முன்பாக 40 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனை எதிரே கட்டப்பட்டு உள்ள 770 குடியிருப்புகள் கொண்ட வீடுகள் முதல்வர் அவர்களால் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.  சென்னையில் செயல்படுகின்ற 57 மூத்தோர் குடியிருப்புகளையும் மேம்படுத்தவும் தினசரி வழங்கப்படும் உணவுப் படியை உயர்த்துவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய சிந்தனைகள் வெளியே வரும். சிந்திக்க முடியும். சிந்தையில் ஒன்றுமே இல்லை. திமுக எதையெல்லாம் முன்னெடுக்கிறதோ, அதை பின்தொடர்ந்து வந்து 10 சதவீதத்தை கூடுதல் ஆக்குவது தான் அதிமுகவின் பணி. தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். எந்தவிதமான பதவியும் இல்லாத அண்ணாமலை திமுகவுக்கு எதிராக கேள்விகளைக் கேட்க தகுதியை வளர்த்துக் கொள்ளட்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ