பாமகவுக்கு உரிமை கோர அக்கட்சி நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
ராமதாஸ் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயா்நீதிமன்றத்தின் வழகாட்டுதல்படி சென்னை ஐகோட்டில் வழக்கு ராமதாஸ் தொடா்ந்துள்ளாா்.
பாமக தலைவா் யாா் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. போலி ஆவணங்களை கொடுத்து பாமகவை அன்புமணி கைப்பற்ற முயற்சிப்பதாக ராமதாஸ் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தாா். கட்சி அதிகாரம் யாா் கையில் என்பது தொடா்பாக தந்தை, மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ராமதாஸ் வழக்கு தொடா்ந்துள்ளாா். கட்சியின் பெயா், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்புமணி கூட்டணி பேச்சுவாா்த்தையை நடத்தவும் தடைவிதிக்க ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


