Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

-

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்யும்படி மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். காவிரி படுகையில் காயும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற குறைந்தது 50 டி.எம்.சி தண்ணீராவது தேவை. ஆனால், வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு சுமார் 12 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.

போராட்டம்

கர்நாடகாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட கோரியும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில், கருகும் பயிரை காக்க காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி 10 பெண்கள், காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MUST READ