spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

-

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

we-r-hiring

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கிஸில் 246 ரன்னும், இந்திய அணி 436 ரன்னும் எடுத்தன. பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 420 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் மற்றும் ஜடேஜாவிற்கு காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

MUST READ