Homeசெய்திகள்விளையாட்டு"RCB ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!" 49 ரன் சாதனை காலி என நினைத்த போது நடந்த...

“RCB ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!” 49 ரன் சாதனை காலி என நினைத்த போது நடந்த அதிசயம்!

-

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான மோசமான சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் தொடரும் நிலையில், கேரளா கிரிக்கெட் லீக் (கேசிஎல்) தொடரில் அரங்கேறிய ஒரு விசித்திரச் சம்பவம் மீண்டும் ஆர்சிபி-யின் 49 ரன் சாதனையைச் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கிற்கு கொண்டு வந்துள்ளது."RCB ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!" 49 ரன் சாதனை காலி என நினைத்த போது நடந்த அதிசயம்!

தொடர் வெற்றிகளுக்கு மத்தியிலும் தொடரும் ட்ரோல்கள்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான அணியாக ஆர்சிபி திகழ்கிறது. 17 ஆண்டுகளாகக் கோப்பை வெல்லவில்லை என்ற குறையைப் போக்கும் விதமாக, கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஆர்சிபி வரலாறு படைத்தது. இருப்பினும், 49 ரன்களில் ஆல் அவுட்டான அந்த ஒரு சம்பவம் மட்டும் இன்றளவும் அந்த அணிக்கு எதிரான முதன்மை ட்ரோல் மெட்டீரியலாக நீடித்து வருகிறது. உலகளவில் எந்தப் போட்டியில் குறைந்த ரன்களுக்கு விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆர்சிபி-யின் இந்த 49 ரன் ரெக்கார்டு நினைவுகூரப்படுவது வழக்கமாக உள்ளது.

we-r-hiring

கேரளா லீக்கில் அரங்கேறிய சர்ச்சை
அந்தவகையில், கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற கேரளா கிரிக்கெட் லீக் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான கொச்சி புளூ டைகர்ஸ் மற்றும் ஆலப்புழா ரிப்பிள்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 7 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆலப்புழா அணி 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 126 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கிப் களமிறங்கிய கொச்சி புளூ டைகர்ஸ் அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் உட்பட டாப் 5 பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து 0 (டக் அவுட்) ரன்னில் வெளியேறினர். அனைத்து வடிவ டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டாகி வெளியேறியது இதுவே முதன்முறையாகும்.

தப்பிய ஆர்சிபி சாபம்
வெறும் 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கொச்சி அணி, அடுத்தடுத்து சரிவைச் சந்தித்து 19 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தணறியது. அந்தச் சமயத்தில், ஆர்சிபி அணியின் 49 ரன் ஆல்-அவுட் சாதனை முறியடிக்கப்பட்டு விடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் போராடி 7 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், ஆர்சிபி-யின் 49 ரன் ஆல்-அவுட் சாதனை தப்பியது. டி20 கிரிக்கெட்டிலேயே நடந்திராத மோசமான டக்-அவுட் சாதனை நிகழ்ந்தபோதிலும், ஆர்சிபி-யின் 49 ரன் சாதனை முறியடிக்கப்படாதது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே மீண்டும் நகைச்சுவையான ட்ரோலாக மாறியுள்ளது.

மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி

MUST READ