Homeசெய்திகள்விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை!

-

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை!
Photo: BCCI

இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது.

ரஜினி படம் பாத்து தான் நானும் நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டேன்… நடிகை சுனைனா!

கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் கோப்பையை நழுவ விட்டாலும், அதன் பிறகு இந்தியா விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 10- ல் வெற்றி பெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. பின்னர், கொரோனா தொற்று அச்சுறுத்தலால், கடைசிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

தென்னாப்பிரிக்காவும் எதிரான தொடரை 1-2 என்ற கணக்கில் பறிக்கொடுத்தது. ஆனால், அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சிங்கம் போல் கர்ஜித்தது. நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் என அடுத்தடுத்த தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது.

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. மற்றொரு புறம், கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நூலிழையில் ஆஸ்திரேலியா அணி தவறவிட்டது. ஆனால், இந்த முறை அதிக புள்ளிகளுடன் முதல் அணியாக தகுதிப் பெற்றது.

ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில், 11 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அத்துடன், ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி தனது வலிமையை உலகுக்கு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது ஆஸ்திரேலியா.

Photo: BCCI

இதனைத் தொடர்ந்து, 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சென்றது ஆஸ்திரேலியா. முதல் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிவடைந்தாலும், கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. பின்னர், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி.

இந்திய மண்ணில் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தரவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் ஜடேஜாவின் அசத்தலான பங்களிப்புடன் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தாலும், முந்தைய தொடர்களில் பெற்ற வெற்றிகளைக் கொண்டு, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்- ஈபிஎஸ்

இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், லண்டனில் உள்ள ஓவலில் வரும் ஜூன் 7- ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ