- Advertisement -
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தனது அடுத்த படமான மகான் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.இவருக்கு இந்த இரு படங்களுமே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார். பா ரஞ்சித் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




