spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

-

- Advertisement -

ஒசூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியிலிருந்து SKMS என்னும் தனியார் பேருந்து பெங்களூர் செல்ல கெலமங்கலம் என்னுமிடத்தில் சென்ற போது, முருகர் கோவில் வளைவில் அதிவேகமாக வந்தது. அப்போது எதிரே மற்றொரு பேருந்து வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து SKMS பேருந்து இடதுபுறமாக இருந்த ராகி வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது. சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி 400 மீட்டர் ஓடிய பேருந்தின் முன்பக்க இரண்டு டயர்கள் கலண்டன. இதில் பெங்களூரு பஸ்சில் பயணித்த ஜெக்கரி கிராமத்தை சேர்ந்த யசோதா (45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

we-r-hiring

சம்பவ இடத்திற்கு வந்த கெலமங்கலம் போலிசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள்மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் பெங்களூர் சென்ற பேருந்து அதிவிரைவாக சென்றது, எதிர் திசையில் வந்த தர்மபுரி நோக்கி சென்ற பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

MUST READ