ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன் வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிக்க இருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், பிற்பகல் முதலே சர்வர் பிரச்னை இருந்ததால் பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை செப்டம்பர் 10 மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 என 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பு செஞ்சவன் பயப்படனுமா?… பாதிக்கப்பட்டவன் பயப்படனுமா?… ‘சக்தித் திருமகன்’ டிரெய்லர் வெளியீடு!
