விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் தான் சக்தித் திருமகன். இந்த படத்தை ‘அருவி’ படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலினி, செல் முருகன், திருப்தி ரவீந்த்ரா, கிரண், ரினி, ரியா ஜித்து, மாஸ்டர் கேஷவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க விஜய் ஆண்டனியே இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். செல்லி ஆர். காலிஸ்ட் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை தொடர்ந்து ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது அரசியல் கலந்த க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரைலர் கட்-ஐ பார்க்கும் போதே படம் விறுவிறுப்பான திரைக்கதையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.