சீமான் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை எனில், அவரின் மனுவை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சீமான் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பினரும் தங்கள் மனுக்களை திரும்பப் பெற வேண்டுமெனவும், அதோடு மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். குறிப்பாக, சீமான் நடிகையை இனி தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், சீமான் தொடர்ந்து நடிகையை அவதூறாக பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் இருப்பதால், அதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்யாதவரை இந்த வழக்கை ரத்து செய்ய இயலாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சியான் விக்ரமின் அடுத்த படம் இவருடன் தான்…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!