spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்

மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்

-

- Advertisement -

ஆன்லைன் மோசடிகளை தடுக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்தமிழகத்தில் ஆன்லைனில் மோசடி தளங்களை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 2025 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.1010 கோடி இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர் .

இதே காலகட்டத்தில் தேசிய சைபர் குற்றப் புகார் மையத்தில் மொத்தம் 88,479 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 510 மோசடி இணைய முகவரிகள் மற்றும் லிங்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் மே மாதத்தில் 169, ஜூன் மாதத்தில் 177, ஜூலை மாதத்தில் 164 மோசடி லிங்குகள் மற்றும் வெப்சைட்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

we-r-hiring

மிகவும் அதிகமான மோசடி லிங்குகள் இன்ஸ்டாகிராமில் பதிவாகியிருந்ததாகவும், அதிகப்படியான முடக்கம் அங்கேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் அப், போன்ற பல்வேறு வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சைபர் மோசடிகளை சந்திக்கும் சூழலில், தேசிய சைபர் குற்ற தடுப்பு இணையதளம் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள 54 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் மாநில சைபர் கட்டளை மையம் (SCCC) ஆகியவற்றின் மூலம் இந்த குற்றங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தியை சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலே தடுத்து நிறுத்திய பாஜக குண்டர்கள் – செல்வப்பெருந்தகை கண்டனம்

MUST READ