spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எடப்பாடி...

922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

-

- Advertisement -

தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வெற்று விளம்பர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று,
எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?
எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்?
எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன?
எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன?
என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ் நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை?

அதை விட்டுவிட்டு வலைத்தளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

we-r-hiring

எனவேதான் மு.க.ஸ்டாலினிடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

சீமான் – நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு… வரும் 12ஆம் தேதி ஒத்திவைப்பு…

MUST READ