spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை அதிரடியாக உயர்வு - இல்லத்தரசிகள் கலக்கம்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு – இல்லத்தரசிகள் கலக்கம்!

-

- Advertisement -

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.55 அதிகரித்து ரூ.6,705க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா உயர்ந்து ரூ.95.60-க்கும், ஒரு கிலோ ரூ. 95,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ