தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் 100 நாள் ஆட்சி மற்றும் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அரசியல் விமர்சகர் எஸ்.பி லச்சுமணன் யூடியூப் சேனலின் விவாத நிகழ்ச்சியில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளார்
திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்த்து, கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த இந்த வரலாற்றுத் திருப்பம் உலகளவில் பேசப்பட்டாலும் அன்றைய மேடையில் முழங்கிய முழக்கங்கள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக அவர் ஆவேசமாக வாதிட்டுள்ளார்.

காற்றில் பறந்த கம்பீரப் பிரகடனங்கள்!
பதவியேற்பு விழாவின் போதே முதல்வர் விஜய் மூன்று அதிரடிப் பிரகடனங்களைச் செய்தார்
ஊழலுக்கு இடமில்லை: “பொதுமக்களின் பணத்தை ஒருபோதும் தொட மாட்டேன்; ஊழல் செய்தவர்களையும் மன்னிக்க மாட்டேன்” என்றார்
ஏகபோக அதிகாரம்: “என்னைத் தாண்டி எந்தவிதமான எக்சா-கான்ஸ்டிடியூஷனல் (Extra-constitutional) அதிகார மையமும் இருக்காது” என முழங்கினார்
வெளிப்படை நிர்வாகம்: “ஆட்சி முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்” என உறுதி கூறினார்
ஆனால், இந்த 100 நாட்களில் நடந்தவைகளோ இந்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்துள்ளதாக விமர்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்
கிட்டத்தட்ட அம்பலமான நிர்வாகச் சீர்கேடுகள்
ஊழல் புகார் மீது மௌனம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லட்சம் புரள்வதாகக் கட்சியின் சொந்த வழக்கறிஞரே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியபோது, உரிய விசாரணைக்கு உத்தரவிடாமல் அந்தப் பெண்ணைக் கட்சியிலிருந்தே விரட்டியடித்தது எந்த ஊழல் ஒழிப்பு?
மதுபானத் தடை நாடகம்: தரமற்றது எனத் தடை செய்யப்பட்ட மதுபானப் பிராண்டுகளின் தடை ஒரே நாளில் அதிரடியாகத் திரும்பப் பெறப்பட்டது யாருடைய நலனுக்காக
ஐஏஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்: அரசு கோப்புகளில் தடையிட்ட நேர்மையான பெண் அதிகாரிக்கு சிஎம் அலுவலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்து, அதை ஏற்க மறுத்தவுடன் உடனடியாகத் தூக்கியடித்தது எந்த வகைத் வெளிப்படைத்தன்மை
மாணவ சமுதாயத்தின் மீது ஒடுக்குமுறை: மாணவர்களின் போராட்டங்களை அடக்கப் போடப்பட்ட அதிர்ச்சி சுற்றறிக்கைகளும், அதற்குத் துணைபோகும் அரசு அதிகாரிகளின் போக்கும் எங்கு சென்று முடியும்?
விவசாயிகளை ஏமாற்றும் அரசாணைகள்: பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அடுத்தடுத்து மூன்று அரசாணைகளை மாற்றி மாற்றி வெளியிட்டு, விவசாயிகளை வதைப்பது எந்த வகையான நிர்வாகத் திறன்?
சட்டம்-ஒழுங்கின் அவலம்: கோவையில் மாணவர் கொலை, திருவெற்றியூரில் போதைப்பொருள் விற்பனையைத் தட்டிக் கேட்டவர்கள் மீதான தாக்குதல் என சட்டம்-ஒழுங்கு பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும்போது அரசின் இந்தச் செவிடான மௌனம் ஏன்?
எச்சரிக்கையும் மீட்சிக்கான வழியும்:
கட்சி நிதி வசூலிக்க மாட்டோம் என்பதில் முதல்வர் விஜய் காட்டும் உறுதியும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நினைக்கும் சில நல்ல சிந்தனைகளும் பாராட்டத்தக்கவை என்றாலும், அவரைச் சுற்றியிருக்கும் கூட்டத்தின் தவறான ஆலோசனைகளும், அதிகார மமதையும் ஒட்டுமொத்த ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன
விமர்சகர் லக்குமணன் கூறுவது போல, இனியாவது முதல்வர் விஜய் தனது மௌனத்தைக் கலைத்து, எதேச்சதிகாரப் போக்கைத் தூக்கி எறிந்துவிட்டு, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்காவிட்டால், மக்கள் அளித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அர்த்தமற்றுப் போய்விடும்!
