Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது - காவல்துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது – காவல்துறை தகவல்

-

தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 நாட்களில்  103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். செ. சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்கள்.

போலி மருத்துவர்கள்

இதனையடுத்து, கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம்-2, திருவாரூர்-12, திருவள்ளூர்-9,  விழுப்புரம்-4, நாகப்பட்டினம்-3, கோயம்புத்தூர்-1, கள்ளக்குறிச்சி-3, சேலம்-10,
கடலூர்-4, நாமக்கல்-1,  வேலூர்-2, தருமபுரி-2, திருவண்ணாமலை-4, கிருஷ்ணகிரி-5,  புதுக்கோட்டை-5, மதுரை-1, கரூர்-1, திண்டுக்கல்-6, பெரம்பலூர்-8, தேனி-5, அரியலூர்-4, சிவகங்கை-1,  தஞ்சாவூர்-10 பேர் என மொத்தம் 103 பேர் கைதாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ