- Advertisement -
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவார் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட நியூ மைனகுரி ரயில் நிலையத்தில் இன்று காலை 6 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமான சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலிபுர்துவார் கோட்ட ரயில்வே அதிகாரிகள் ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.