spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று (டிச.09) சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.

இன்று (டிச.09) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியாகவும் இருக்கக் கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ