
தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஆழிப்பேரலைத் தாக்கி இன்றுடன் (டிச.26) 19 ஆண்டுகள் ஆகின்றன.உறவுகளை இழந்து மனதில் ஆறாத காயமாகப் பதிந்துவிட்ட தினத்தை கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…
கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் ஒரே இடத்தில் 130 பேர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மக்கள் கண்ணீரோடு ஊர்வலமாக வந்து இழந்த தங்கள் உறவுகளை நினைவுக் கூர்ந்தனர். நாகை மாவட்டத்தில் 6,000- க்கும் அதிகமானோரின் உயிரை சுனாமி பறித்துச் சென்றது.
25 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இன்று (டிச.26) கடலுக்குள் செல்லாமல் துக்கம் அனுசரித்து வருகின்றனர். மும்மத பிரார்த்தனையும் நடைபெற்றது. உறவுகளை இழுத்துச் சென்ற கடற்கரைக்கு பேரணியாகச் சென்றவர்கள், பால் ஊற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை
கடலூர் மாவட்டத்திலும் சுனாமி நினைவுத் தின வழிபாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றது.