- Advertisement -
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத் தலைவா் விஜய் தனது வலைத்தளப்பக்கத்தில், “வாக்காளப் பெருமக்களே, வணக்கம்.
நமது வாக்கு- நமது உரிமை. ஜனநாயகக் கடமை.

எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர். ஜனநாயகம் காப்பது நம் கடமை.
ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்” என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளாா்.
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும் – விஜய் கோரிக்கை
