Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

-

தமிழ்நாட்டில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வ நாகரத்தினம், மைலாப்பூர் காவல் துணை ஆணையராக ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அண்ணாநகர் காவல் துணை ஆணையராக புக்யா ஸ்னேகா, பூக்கடை காவல் துணை ஆணையராக சுந்தரவடிவேல் மாற்றப்பட்டுள்ளனர். சுப்புலட்சுமி கோயம்பேடு காவல் துணை ஆணையராகவும், சுஜித்குமார் சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை தலைமையக துணை ஆணையராக மெகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

tamilnadu assembly

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கவுதம் கோயல், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்-பி ஆக ஜி.ஸ்டாலின், திருப்பத்துர் மாவட்ட எஸ்.பி. ஆக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்.பி. ஆக அருண் கபிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கருர் மாவட்ட எஸ்.பி. ஆக பெரோஸ் கான், தருமபுரி மாவட்ட எஸ்.பியாக மகேஷ்வரன், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக கண்ணன் மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சினிவாசன் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

MUST READ