Homeசெய்திகள்தமிழ்நாடு3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....சென்னைக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….சென்னைக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் நாளை (ஜன.07) மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் எப்போது”- தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை (ஜன.07) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.06) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.07) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பொதுமக்கள் கலக்கமடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ