spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து 3 பேர் பலி

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து 3 பேர் பலி

-

- Advertisement -

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து 3 பேர் பலி

நாமக்கல்லில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Image

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன், தனலட்சுமி(62) தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவரது வீட்டின் வளாகத்தில் பார்த்தசாரதி (70) , லதா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தனியார் சிலிண்டர் நிறுவன விநியோக ஊழியர் அருண்குமார் சிலிண்டர் விநியோக செய்ய பார்த்தசாரதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பார்த்தசாரதி வீட்டின் அருகே வசித்து வரும் தனலட்சுமி என்பவரின் வீட்டில் உள்ள சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை சரி செய்ய முயன்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்ததில் காயமடைந்த அருண்குமார் அலறி அடித்துக்கொண்டு வெளி ஓடியுள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கான நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட தனலட்சுமி மீட்பதற்காக பார்த்தசாரதி சென்றுள்ளார். அங்கு வீடு முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்த நிலையில் இருவரும் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி, பார்த்தசாரதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ