Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி... மாயமான 2 பேரை தேடும்...

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி… மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரம்

-

- Advertisement -

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புகழ்வாய்ந்த பூண்டி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று தேர் பவனி நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டை சேர்ந்த சார்லஸ் மகன்கள் பிராங்கிளின், ஆண்டோ, அவர்களது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய பூண்டிக்கு வந்திருந்தனர். இன்று காலை பூண்டி மாதா கோவில் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கலையரசன்,கிஷோர் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மனோகரின் உடலும் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் மாயமான பிராங்கிளின், ஆண்டோ ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

MUST READ