spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!

44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!

-

- Advertisement -

 

44 புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து!

we-r-hiring

பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (பிப்.11) 44 புறநகர் ரயில் சேவைகளை ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.

கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே ரயில்வே வழித்தடத்தில் இன்று (பிப்.11) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை- தாம்பரம், தாம்பரம்- சென்னை கடற்கரை, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை, காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை, திருமால்பூர்- சென்னை கடற்கரை உள்ளிட்ட 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (பிப்.11) முழுவதுமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இன்று (பிப்.11) இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமாரியாக திவ்யபாரதி… தி கோட் படப்பிடிப்பு புகைப்படம் வைரல்…

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ, அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களையோ அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

MUST READ