Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து நாட்களாகியும் வடியாத வெள்ளம்!

ஐந்து நாட்களாகியும் வடியாத வெள்ளம்!

-

- Advertisement -

 

ஐந்து நாட்களாகியும் வடியாத வெள்ளம்!
Video Crop Image

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஐந்து நாட்களாக வெள்ளம் வடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, பெய்த கனமழையால் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பகுதிகள் முழுவதும் வெள்ள நீர் சூழந்துள்ளது. இதனால் வீடுகளிலேயே பொதுமக்கள் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ஓடுவதால் அப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை ஓய்ந்து ஐந்து நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் வீடுகளைப் பூட்டிவிட்டு, வேறு இடத்திற்கு செல்ல அப்பகுதி மக்கள் முடிவுச் செய்துள்ளனர். இந்த சூழலில், காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஒன்றாகக் கட்டி வைத்து, அதில் மிதவை செய்து வெள்ள நீரை கடக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!

மின்மோட்டார் வைத்து தேங்கிய மழைநீரை வெளியேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ