Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஜன.05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை (ஜன.06) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 07- ஆம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது. ஜனவரி 08- ஆம் தேதி திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”

சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அந்த கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், ஜனவரி 06, 07 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.

MUST READ