Homeசெய்திகள்தமிழ்நாடுலக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

-

- Advertisement -

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து
விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம் குடோனாக செயல்பட்டு வந்தது. இன்று மாலை 5 மணியளவில் 3 மாடி கட்டிடம் திடிரென இடிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 28 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர்  சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

MUST READ