spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் திடீர் ரத்து... பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி!

-

- Advertisement -

சென்னையிலிருந்து லண்டன், அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 6 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 5.35 மணிக்கு மிண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் லண்டனில் இருந்து தற்போது வரை புறப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம், ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த விமானம் நாளை அதிகாலை, லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

22 விமானங்கள் புறப்பாடு தாமதம்

இதேபோல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு, அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், பிற்பகல் 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய ஆகாஷா பயணிகள் விமானமும், மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து காலை 7.05 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 1  மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என 4 விமானங்கள் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
Photo: Chennai International Airport

சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன், அந்தமான், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு விமானங்கள் என  6 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் க

MUST READ