Homeசெய்திகள்தமிழ்நாடு6 முறை கரு கலைப்பா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

6 முறை கரு கலைப்பா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

-

6 முறை கரு கலைப்பா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

சீமான் அவர்கள் மீது விஜயலட்சுமி அளித்த கருக்கலைப்பு புகார் தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Image

நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப் பெற்றுவிட்டார். அதே பிரச்சனைக்கு மீண்டும் அவர் தற்போது கொடுத்துள்ள புகாரின்பேரில் சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகை விஜயலட்சுமியை போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த புகாரின்பேரில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

MUST READ