spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவியுடன் பிரபல நடிகர்...வைரலாகும் வீடியோ....நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!

கல்லூரி மாணவியுடன் பிரபல நடிகர்…வைரலாகும் வீடியோ….நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!

-

- Advertisement -

 

கல்லூரி மாணவியுடன் 61 வயது முதியவர்...வைரலாகும் வீடியோ....நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!
Video Crop

சென்னை கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூவைச் சேர்ந்தவர் மதுசூதனன். 61 வயதான இவர் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி. படித்து மருத்துவராக உள்ளார். அதேபோல் சென்னை, கோயம்புத்தூர், பாலக்காடு உள்ளிட்டப் பகுதிகளில் ஹாப்பி ஹோம்ஸ் என்ற முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். பெயருக்கு மருத்துவர் என்றாலும் நந்தா, டான் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மதுசூதனன் சீரியலிலும் நடித்து வந்திருக்கிறார்.

we-r-hiring

துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்த நிலையில், தனது சொந்த வேலை காரணமாக, கடந்த பிப்.9- ஆம் தேதி கொளத்தூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது கொரட்டூர் அருகே காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த சமயத்தில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட 4 பேர் என்அருகே வந்து அதில் ஒருவன் என்னை பிடித்துக் கொள்ள மற்றொருவன் என் கையில் இருந்த 2 தங்க மோதிரம் மற்றும் 5,000 பணத்தை வழிப்பறி செய்து கொண்டு தப்பிச் சென்றதாக கொரட்டூர் காவல் நிலையத்தில் பிப்.15- ஆம் தேதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவர் மதுசூதனன் புகார் அளித்தார்.

கல்லூரி மாணவியுடன் 61 வயது முதியவர்...வைரலாகும் வீடியோ....நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!

அவசர பணி காரணமாக, கேரளா சென்று இருந்தால் தாமதமாக புகார் அளிப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் காவல்துறையினர் தனியார் கல்லூரி மாணவியையும், அவரது நண்பரையும் கைது செய்து மேலும் சிலரைத் தேடி வருவதாகக் கூறினர். இதனிடையே வழிப்பறி வழக்கில் சிக்கிய இளம் பெண்ணுடன் மருத்துவர் மதுசூதனன் நெருக்கமாக இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஒரு சில இளைஞர்களிடம், மதுசூதனன் அரை நிர்வாணத்தோடு மன்னிப்புக் கேட்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ குறித்து பரபரப்பு தகவலும் ஒன்று கிடைத்துள்ளது. அதில் மருத்துவரான மதுசூதனன் அண்ணா நகரில் உள்ள பிரபல கிளப்பில் உறுப்பினராக உள்ளார். எனவே இந்த கிளப்பிற்கு அடிக்கடி செல்வது இவரது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது அங்கு மசாஜ் தரப்பிஸ்டாக இருந்த கல்லூரி மாணவியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியுடன் தொடர்ந்து பேசி வந்த நிலையல், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் மாணவி ரீல்ஸ் போடப்பட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் பார்த்து அவருக்கு சினிமாவில் ஆசை இருப்பதை அறிந்து கொண்டுள்ளார்.அவரிடம் நானும் ஒரு பிரபல நடிகர் தான் எனவும் தெரிவித்து தனக்கு அனைத்து இயக்குனர்களையும் தெரியும் என தெரிவித்திருக்கிறார்.

ஜடேஜா சிறப்பான பந்துவீச்சு – இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்

இருவாரம் கழித்து மாணவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மருத்துவர் அவரை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிற்கு வருமாறும் அந்த இயக்குனர் இன்று வருகிறார். அவரிடம் உன்னை அறிமுக செய்து சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தைக் கூறி நம்ப வைத்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடும் என நம்பிய மாணவி சொகுசு பங்களாவிற்கு துணிந்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக சொகுசு பங்களாவிற்கு முதலில் தனியாகச் சென்று வந்த நிலையில், ஒரு நாள் கூடவே தோழியையும் அழைத்து சென்று கல்லூரி மாணவி மருத்துவரிடம் தான் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுக்கச் சொல்லி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி மாணவியுடன் 61 வயது முதியவர்...வைரலாகும் வீடியோ....நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!

வீடியோவைப் பார்த்து பயந்து போன மருத்துவர் மதுசூதனனும், கல்லூரி மாணவி கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கினால் எப்படி என நினைத்து,கல்லூரி மாணவி பெரிய தொகையாக வாங்க திட்டமிட்டுள்ளார்.அதன்படி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அழைத்துச் சென்று மருத்துவர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக நண்பணிடம் உணர்ச்சி பொங்க செல்போனில் பேசி கல்லூரி மாணவி நம்ப வைத்துள்ளார்.

துருவ் ஜீரோல் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்

இதனை நம்பிய நண்பனும், தனது சக நண்பர்களை அழைத்துக் கொண்டு சொகுசு பங்களாவில் வைத்தே மருத்துவரை கையும், களவுமாக பிடித்து அடித்து மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது. ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி பணம் பறிக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் விரக்தியில் இருந்த மருத்துவர் மதுசூதனன் செங்குன்றம் துணை ஆணையர் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி உதவியயை நாடி உள்ளார்.

துணை ஆணையரின் ஐடியா படி கொரட்டூர் காவல் நிலையத்தில் மாணவி மீது பொய்யான வழிப்பறி வழக்கு பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் நடக்காத வழிப்பறியை, வழிப்பறி நடந்தது போல சித்தரித்து, திரைக்கதை எழுதி காவலர்களே பொய் வழக்குப்பதிவு செய்தது பொதுமக்களிடையே காவல்துறையினர் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாகியுள்ளது. கல்லூரி மாணவியின் திட்டத்திற்கு உதவ முன்வந்து, தற்போது அவரது நண்பர்களும், இந்த சம்பவத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

MUST READ