spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு

செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு

-

- Advertisement -

செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு

செங்கல்பட்டு அடுத்தே மகேந்திராசிட்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலை வழக்கம் போல் நேற்று பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

Image

இன்று காலை கோவிலை சுத்தம் செய்ய வந்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்க்கும் போது கோவிலில் இருந்த ஐம்பொன் சிலை திருடு போனது தெரியவந்தது. உடனே காவல் கட்டுபாட்டு அறை 100 எண்ணிற்க்கு தகவல் தெரியபடுத்தினர். காவல் கட்டுபாட்டு அறையில் இருந்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரியபடுத்தியதை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் ஐம்பொன் சிலை திருடு போன மகேந்திராசிட்டி பகுதிக்கு விரைந்தனர். நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது 16 கிலோ ஐம்பொன் சிலை மற்றும் 11 கிலோ பித்தலை விளக்கு திருடு போனதும் தெரியவந்துள்ளது.

we-r-hiring

திருட்டு தொடர்பாக சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி பகத்சிங்நகரை சேர்ந்த செல்லா (28) கொடுத்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வருகை தந்து ஐம்பொன் சிலை திருடி சென்ற குற்றவாளியின் தடயங்களை சேகரித்தூ செல்லவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

சிலை

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி மகேந்திராசிட்டி பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் மற்றும் போக்குவரத்து நடமாட்டம் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை மற்றும் விளக்குகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 16 கிலோ ஐம்பொன் சிலை மதிப்பு பல கோடி இருக்கலாம் என கூறப்படுகின்றது.

MUST READ