Homeசெய்திகள்தமிழ்நாடுபேரவையில் தாறுமாறான விவாதம்! "ஜி ஸ்கொயர்" வார்த்தைக்குப் பதிலடியாகக் கிளம்பிய "லாட்டரி" பிரச்சினை... ஸ்தம்பித்த அவை!

பேரவையில் தாறுமாறான விவாதம்! “ஜி ஸ்கொயர்” வார்த்தைக்குப் பதிலடியாகக் கிளம்பிய “லாட்டரி” பிரச்சினை… ஸ்தம்பித்த அவை!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அவையில் காரசார விவாதமும், கூச்சலும் நிலவியது.பேரவையில் தாறுமாறான விவாதம்! "ஜி ஸ்கொயர்" வார்த்தைக்குப் பதிலடியாகக் கிளம்பிய "லாட்டரி" பிரச்சினை... ஸ்தம்பித்த அவை!

திமுக உறுப்பினர்களின் கேள்வியும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமும்
மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பினர்.

we-r-hiring

இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “இத்திட்டத்திற்கு மொத்தம் 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அதில் 3,774 ஏக்கர் பட்டா நிலங்கள்; 2,681 ஏக்கர் நிலங்கள் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் ஆகும். அரசு நிலங்களாகக் காட்டப்பட்ட 1,972 ஏக்கரில், கிட்டத்தட்ட 1,558 ஏக்கர் நீர்நிலைகளாகவே உள்ளன. 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகத் தவறான தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால், இதுவரை 1,802 ஏக்கர் (48%) மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுவள்ளூர் போன்ற கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், “சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுவிட்டது என்று பொய்யான தகவல்களைச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை பெறப்படவில்லை. விவசாயிகளையும் நீர்நிலைகளையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஜி ஸ்கொயர் (G Square) மாப்பிள்ளைக்காகவும், கருப்புப் பணத்தை முதலீடு செய்பவர்களுக்காகவுமே சிலர் கவலைப்படுகிறார்கள்” என்று விமர்சித்துப் பேசினார்.

பேரவையில் தாறுமாறான விவாதம்! "ஜி ஸ்கொயர்" வார்த்தைக்குப் பதிலடியாகக் கிளம்பிய "லாட்டரி" பிரச்சினை... ஸ்தம்பித்த அவை!

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு & அவையில் கூச்சல்
அமைச்சர் நிர்மல்குமார் ‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை’ என்று குறிப்பிட்டதும், கோபமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக எழுந்து நின்று பலத்த எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.

தங்கம் தென்னரசு பதிலடிதவெக உறுப்பினர்கள் அமளி
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டத்துறை அமைச்சர் இந்த பாணியில் விவாதத்தைக் கொண்டு செல்ல விரும்பினால், நானும் அதே பாணியிலேயே பேசுகிறேன். ஜி ஸ்கொயர் என்று நீங்கள் விமர்சிப்பீர்கள் என்றால், எந்த லாட்டரி மருமகனுக்காகப் புதிய விமான நிலையத்தை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் பார்க்கிறீர்கள் என்று நான் கேட்கவா?” எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தங்கம் தென்னரசுவின் இந்த பதிலடியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கொதித்தெழுந்து நின்று பேரவையில் ஆவேசமாகக் கூச்சலிட்டனர். இருதரப்பு உறுப்பினர்களின் தொடர் காரசாரமான விவாதங்களாலும், கூச்சலாலும் பேரவை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

“பொறுப்பு அமைச்சர்கள் இருக்காங்க!”… “ஒரு நாளில் எதுவும் மாறாது!” — பேரவையில் செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி அனல் பறந்த விவாதம்!

MUST READ