Homeசெய்திகள்தமிழ்நாடு"பழைய திட்டங்களுக்குப் புது பெயிண்ட்!" – தவெக பட்ஜெட்டை விளாசிய தமிமுன் அன்சாரி!

“பழைய திட்டங்களுக்குப் புது பெயிண்ட்!” – தவெக பட்ஜெட்டை விளாசிய தமிமுன் அன்சாரி!

-

- Advertisement -

​தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது அரசியல் வட்டாரங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மஜக தலைவா் தமிமுன் அன்சாரி சன் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தவெக அரசின் பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பழைய திட்டங்களுக்குப் புது பெயிண்ட்!" – தவெக பட்ஜெட்டை விளாசிய தமிமுன் அன்சாரி!

we-r-hiring

​”அலங்காரப் பட்ஜெட்” பெயிண்ட் அடிக்கும் படலம் – ​தவெக அரசின் இந்த பட்ஜெட் வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய தமிமுன் அன்சாரி, இதுகுறித்துச் சுவாரஸ்யமான உதாரணம் ஒன்றைக் கூறினார். “அடுக்குமாடிக் கட்டிடம் கட்டித் தருவதாகச் சொல்லிவிட்டு, இறுதியில் அந்தப் பழைய கட்டிடத்திற்குப் பெயிண்ட் அடிப்பதற்கான செலவுக்கு மட்டுமே நிதியை ஒதுக்கியது போல உள்ளது இந்த பட்ஜெட்” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்குத் தற்போதைய அரசு பெயிண்ட் அடித்துத் தங்களது திட்டங்கள் போல் காட்ட முயல்வதாகவும் அவர் விமர்சித்தார். ​பள்ளி கல்வித்துறை நிதி குறைப்புக்குக் கண்டனம் குறிப்பாக, எதிர்காலத் தலைமுறையின் தூணாக விளங்கும் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் குறைத்திருப்பது கடும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார். கல்வி என்பது வெறும் செலவு அல்ல, அது மனித வள மேம்பாட்டிற்கான எதிர்கால முதலீடு என்பதை அரசு உணர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

​எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் அவலம், ​சட்டப்பேரவை நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும் தமிமுன் அன்சாரி தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பக்கமே தொலைக்காட்சி கேமராக்கள் செல்வதைத் திட்டமிட்டுத் தவிர்ப்பது ஜனநாயக முறைக்கு விரோதமானது என்றார். சபாநாயகர் அவை முழுவதையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்றும், தனித்தனி கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இருக்கை ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

​மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத இந்த அலங்காரப் பட்ஜெட்டைப் பொதுமக்கள் மற்றும் சபாநாயகர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

திமுக திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பெயர் மாற்றம் செய்கிறது தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

MUST READ