Homeசெய்திகள்தமிழ்நாடுபாரம்பரியக் கலையா இல்லை ஆபாசக் கூத்தா? கரகாட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஐகோர்ட் கவலை!

பாரம்பரியக் கலையா இல்லை ஆபாசக் கூத்தா? கரகாட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஐகோர்ட் கவலை!

-

- Advertisement -

ஆபாச நடனமாடும் கலைஞர்கள் மீது காவல்துறையினர் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்! அரியலூர் கோயில் திருவிழா கரகாட்ட நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு!பாரம்பரியக் கலையா இல்லை ஆபாசக் கூத்தா? கரகாட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஐகோர்ட் கவலை!

தமிழர்களின் பாரம்பரியக் கிராமியக் கலையான கரகாட்டத்தில் அண்மைக்காலமாக ஆபாச உடைகள் மற்றும் நடனங்கள் அதிகரித்து வருவது குறித்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் அடையார்பாளையத்தில் உள்ள அருள்மிகு கோயில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி விழாக்குழுவினர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆபாச நடனம் சார்ந்த காரணங்களைக் சுட்டிக்காட்டி இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்துத் தடை விதித்திருந்தனர். இத்தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

we-r-hiring

“ஆந்திராவில் நிலைமை இன்னும் மோசம்” – நீதிபதி கவலை
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கிராமியக் கலைகளின் தற்போதைய நிலை குறித்துக் கவலை தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, “பாரம்பரியக் கலையான கரகாட்டத்தில் தற்போதெல்லாம் ஆபாசமான உடைகள் அணிவதும், எல்லை மீறிய ஆடல் பாடல்களும் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டை விட பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலைகள், இதுபோன்ற செயல்களால் தன் தனித்துவத்தை இழந்து வருகின்றன.” என்று குறிப்பிட்டார்.பாரம்பரியக் கலையா இல்லை ஆபாசக் கூத்தா? கரகாட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஐகோர்ட் கவலை!

ஆபாசம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்!
தொடர்ந்து, அரியலூர் அடையார்பாளையம் கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த பல்வேறு கண்டிப்பான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.  மேலும், கரகாட்ட நிகழ்வுகளின் போது கலைஞர்கள் ஆபாச உடை அணிந்தோ அல்லது கண்ணியக் குறைவான முறையிலோ நடனமாடினால், அவர்கள் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் காவல்துறையினர் தாராளமாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.

சொத்து வரி தாறுமாறாக உயர்வு – அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜன் சாடல்!

MUST READ