Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு

ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு

-

- Advertisement -

சிறப்பு முகாம் பலனாக, நேற்று வரை ஒரு கோடி நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன் தங்களின், ‘ஆதார்’ எண்ணை இணைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

we-r-hiring

இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கியது. ஆதார் எண்ணை இணைக்க வசதியாக, மின் வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களிலும், நவம்பர் 28ம் தேதி துவக்கப்பட சிறப்பு முகாம், இம்மாதம் 31ம் தேதி வரை செயல்பட உள்ளது. ஆதார் இணைப்புக்கு, எண் மட்டும் பதிவு செய்வதுபோன்ற எளிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதையடுத்து தினமும் 50 ஆயிரம் பேர், ஆதார் இணைத்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி மொத்தம்,ஒரு கோடி நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

….

MUST READ