Homeசெய்திகள்தமிழ்நாடுகடப்பாறை, மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய ஆவடி மாநகராட்சி மேயர்!

கடப்பாறை, மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய ஆவடி மாநகராட்சி மேயர்!

-

 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிக்கு உட்பட்ட 9- வது வார்டு சரஸ்வதி நகர் பிரதான சாலை, தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், இது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, மேயரோ இன்று (நவ.23) காலை கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, தேங்கிய மழைநீரை வழித்தடம் ஏற்படுத்தி வெளியேற்றினார்.

ஒரே இடத்தில் ரஜினி – கமல் படப்பிடிப்பு… அன்பை பரிமாறி நெகிழ்ச்சி…

பின்னர், மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை உடனடியாக செய்ய மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் 2 ஜெசிபி இயந்திரங்கள் கொண்டு வந்து நீர் போவதற்கான பாதையைச் சீரமைத்து, மழைநீர் தேங்காத வண்ணம் சாலைகளையும், கால்வாய்களையும் சீரமைத்தனர்.

வெறித்தனமான பீஸ்டாக ரன்பீர் கபூர்… மிரட்டலான அனிமல் டிரைலர்!

மேயரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

MUST READ