நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக திமுக சார்பில் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பிறந்தநாள் விழா என்கிற பெயரில், பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.


இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு @mkstalin அவர்களுக்கு,
திரு @rajinikanth அவர்களின்
பிறந்தநாள் வாழ்த்து#HBDMKStalin70 #திராவிடநாயகன்— B.Kesavan (@BkesavanOfcl) February 28, 2023


