Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜய் ஒரு மாயாவி... கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?" - கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

-

- Advertisement -

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நகர்வுகள், சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்துத் தனது பாணியில் விரிவாகவும் காரசாரமாகவும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்."விஜய் ஒரு மாயாவி... கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?" - கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

சோனம் வாங்சுக் சந்திப்பும் விஜயின் அரசியல் நகர்வுகளும்
லடாக்கில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்தாக பரவிய தகவல்கள் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய உமாபதி, விஜய் தனது பிம்பத்தை ஒரு மாயாவி போல வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். வட மாநில மக்கள் மற்றும் எல்லை கடந்த பகுதிகளிலும் கூட அவரைப் பற்றிய பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

சட்டமன்ற நிகழ்வுகளும் சமூகச் சித்தரிப்புகளும் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா உள்ளிட்ட சிலர் கடந்த கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டுப் பேசிய நிகழ்வைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். மேலும், திரைப்படங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த உமாபதி, “நண்பர்களுக்கு இடையே இயல்பாகப் பேசப்படும் கருத்துகளுக்கும், பொதுவெளியில் வைக்கப்படும் அதிகாரப்பூர்வ விமர்சனங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது” என்று தெளிவுபடுத்தினார்.

"விஜய் ஒரு மாயாவி... கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?" - கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

‘அன்னப்பூர்ணா’ இலவச கேஸ் உருளைத் திட்டம்: சாத்தியக்கூறுகள்
அரசு அறிவித்துள்ள ‘அன்னப்பூர்ணா’ இலவச கேஸ் உருளைத் திட்டம் குறித்துத் தனது பார்வையை முன்வைத்த உமாபதி, ஒரே நேரத்தில் ஆறு கேஸ் சிலிண்டர்களை மக்களுக்கு வழங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என்றார். வீடுகளில் சிலிண்டர்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான இடவசதியைக் கருத்தில் கொண்டு, ஆறு சிலிண்டர்களைப் பிரித்து மூன்று மூன்றாக வழங்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தார்.

சாமானியர்களின் நிலையும் பொருளாதாரப் பார்வையும்
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த இலவச கேஸ் உருளைத் திட்டம் செல்லாது என்பதால், உண்மையான பயனாளிகளுக்கு இத்திட்டம் போய்ச்சேருமா என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அடித்தட்டு மக்களுக்குக் கோவில் அன்னதானம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச உணவுகள் பரவலாகக் கிடைத்து வரும் சூழலில், மின்கட்டண உயர்வு மற்றும் இலவச கேஸ் உருளைத் தேவைகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் வெவ்வேறு விதமான கருத்துகள் நிலவி வருவதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அன்றாட அரசியல் நகர்வுகள் குறித்துத் தொடர்ந்து உற்றுநோக்க வேண்டியது அவசியம் என்று கூறி பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளாா்.

MUST READ