Homeசெய்திகள்தமிழ்நாடுமுதியோர் இல்லத்தில் பொங்கல் விழா - நடனமாடி முதியவர்களை உற்சாகப்படுத்திய நடிகர் செந்தில்

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா – நடனமாடி முதியவர்களை உற்சாகப்படுத்திய நடிகர் செந்தில்

-

சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகர் செந்தில் கலந்துகொண்டு அவர்களை உற்சாகபடுத்தினார்.

சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியில் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு, ‘ரெயின் ட்ராப்ஸ்’ சமூக அமைப்பு சார்பில் ‘கிராமிய கலை விழா – சீர்மிகு சமத்துவ பொங்கல் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஆர். ரைஹானா, வி.ஜி. சந்தோசம், நடிகர் செந்தில், வேல்மோகன், டி. வி.,தேவராஜன் மற்றும் விருது பெற்ற மக்கள் இசை கலைஞர்கள் முத்து சிற்பி, மதிச்சியம் பாலா மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் மேளம், தாளம் முழங்க வரவேற்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, கல் அடுப்பில் பொங்கல் வைத்த பின், வேலம்மாள் பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியுடன் கிராமிய கலைவிழா துவங்கியது. ஹரிதா மற்றும் அரவிந்த் பாடலை தொடர்ந்து, மூதாட்டிகள் மற்றும் இளம் பெண்கள் கண்டாங்கி சேலை கட்டி கும்மி பாடலுக்கு நடனமாடினர்.தொடர்ந்து, ஆனந்தம் சிறப்பு பள்ளி மாணவர்களின் பிரமிட் நடன நிகழ்ச்சி நடந்தது.

இதனையடுத்து மக்கள் இசை கலைஞர் சுந்தரமூர்த்தி, முத்து சிற்பி மற்றும் மதிச்சியம் பாலா ஆகியோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சுக்ரா நடன குழுவினர், உயர்ந்த குச்சியில் ஏறி அதனைக் காலாகப் பயன்படுத்தி ஆடும் கொக்கலிக்கட்டை ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு நடனம், கரகாட்டம், தாண்டிய ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறை இசை நடனம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

MUST READ