
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் பழங்கால நங்கூரம் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில் கிடைத்தப் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!
அப்போது, ஒரு முதுமக்கள் தாளி பக்கவாட்டில் இரும்பால் ஆன, இரண்டு அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூருக்கும், கடல்சார் வணிகத்திற்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைந்தால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.