
திருவாரூரில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்களால் அரசியல் களம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அண்மையில் தி.மு.க.வை விமர்சித்து அ.தி.மு.க.வினர் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒட்டிய சுவரொட்டி பேசும் பொருளாக மாறியது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வை விமர்சித்து தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அ.தி.மு.க. கூட்டணியில் யாரும் வராததைக் குறிப்பிட்டு ‘கண்டா வரச் சொல்லுங்க’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் களம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!
இந்நிலையில், ‘கண்டா வரச் சொல்லுங்க’ என குறிப்பிட்டுள்ள சுவரொட்டியை இளைஞர்கள் இருவர் நள்ளிரவில் சுவர்களில் ஒட்டிய போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதை அறிந்த தி.மு.க.வினர் வைகைமான் காவல் நிலையத்திற்குச் சென்று கேள்வி எழுப்பியதால் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர்.