ஜல்லிக்கட்டு தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி- விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்ட திருத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்கிறோம். ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுத்தவர் ஈபிஎஸ். இதை கொண்டாட அதிமுகவுக்கு உரிமை உள்ளது. ஜல்லிகட்டுக்கு 2023ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி. கலாச்சார மற்றும் மரபு விழாவாக கொண்டாடுவோம். ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்ட திருத்தை கொண்டு வந்த அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி.

நாடே எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது காளை வளர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான தீர்ப்பு இது” என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் ரத்து செய்யப்படாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடதக்கது.