அ.தி.மு.க. சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிய்வற்றைப் பயன்படுத்தி வருவதை எதிர்த்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 26- ஆம் தேதி மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களும் முன் வைக்கப்பட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்று (ஜன.11) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில், “அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து, தனி நீதிபதி அமர்வை நாடதான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அ.தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் கூறுகையில், “அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட ஓ.பன்னீர்செல்வம் இல்லை; கட்சியின் பெயர் பதவியை இனி ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த முடியாது” என்றார்.