Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை- விஜயபாஸ்கர்

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை- விஜயபாஸ்கர்

-

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை- விஜயபாஸ்கர்

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள், எடப்பாடி தலைமையில் அதிமுக வலிமையான கட்சியாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்த மாநாட்டிற்கான லோகோ பேஜை இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டு அதனை அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “ஆகஸ்ட் 20 மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும், வலிமையான எதிர்க்கட்சி என்ற நிலையை இந்தியாவிற்கே எடுத்துரைக்கும். மதுரை மாநாடு எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை ஆளும் கட்சியாக அமர வைக்கும் மாநாடாக அமையும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள், எடப்பாடி தலைமையில் அதிமுக வலிமையான கட்சியாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தான் இலக்கு, அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை.

தென்இந்தியாவிலேயே மிகப்பெரிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடுதான் டெல்லியில் பிரதமர் அருகே அவர் இருந்தது. மதுரை மாநாடு நடைபெற உள்ள நிலையில், எந்த நெருக்கடி வந்தாலும் அதனை சட்டபடி சந்திப்போம். மருத்துவர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை பின்னோக்கிப் போவதால் மருத்துவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். முதலில் மருத்துவர்களின் மனநிலையை சரி செய்ய வேண்டும், அப்போதுதான் நோயாளிகளை மருத்துவர்கள் குணமாக்குவார்கள்” என்றார்.

MUST READ